தொழில்நுட்பம்

சீனாவில் வாட்ஸ்அப் செயலிக்கு தடை

சீனாவில் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான தகவல்களின்படி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றே சீனாவில் வாட்ஸ்அப் செயலியும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றே வாட்ஸ்அப் செயலி பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களின் படி சீன அரசாங்கம் வாட்ஸ்அப் செயலிக்கு தடை விதித்துள்ளது என்றும் சீனா முழுக்க வாட்ஸ்அப் சேவை முழுமையாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா முழுக்க கடந்த சில மாதங்களில் பலமுறை வாட்ஸ்அப் பயன்பாடு தடைப்பட்டது. வாடிக்கையாளர்களால் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியாத சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று முதல் சீனாவில் வாட்ஸ்அப் சேவை முழுமையாக தடைப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி குறைந்தகவல்களை முழுமையான என்க்ரிப்ஷன் வசதியை வழங்குகிறது. சீனாவின் கிரேட் ஃபயர்வால் மூலம் சைபர் துறை சார்ந்த நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வரும் சீன அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் இடையூறை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து செயலிக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் சர்வதேச சிம் கார்டுகளை பயன்படுத்தும் வாட்ஸ்அப் பயனர்கள் எவ்வித இடையூறையும் சந்திக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சீன வாடிக்கையாளர்கள் மட்டுமே வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவில் பேஸ்புக் செயலி 2009-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button