...
செய்திகள்

சீன – இலங்கை நல்லுறவை சிதைக்க சிலர் முயற்சி

சீன – இலங்கை நட்புறவையும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்தில் சீனாவுடன் இலங்கை ஒத்துழைத்து தனது பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னேற்றுவதைக் காண விரும்பாத சிலர் கடன்வலை போன்ற கூற்றுகளைப் பரப்பி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவைக் களங்கப்படுத்தி வருவதோடு, எதிர்ப்பு சக்தியை ஆதரித்து, இலங்கையின் உள்நாட்டு அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தவும் சீன – இலங்கை ஒத்துழைப்பில் தலையிடவும் முயன்று வருகின்றனர்.

இத்தகைய பிரச்சினைகளை சீனாவும் இலங்கையும் சீரான முறையில் கையாண்டு, தீய நோக்கம் கொண்டுள்ளவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி விடக் கூடாது. 

இருதரப்புகளின் கூட்டு முயற்சியுடன், சீன – இலங்கை உறவு புதிய வரலாற்று நிலைமையில் தொடர்ந்து புத்துயிர் பெற்று, இருநாடுகள் மற்றும் இருநாட்டு மக்களுக்கு மேலும் பெரும் நன்மை பயக்கும் என நம்புவதாக லியூ சொங்யீ, ஷாங்காய் சர்வதேச ஆய்வு கழகம் தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான அரிசி – இறப்பர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் லியூ சொங்யீ, ஷாங்காய் சர்வதேச ஆய்வு கழகம் இதனைத் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2022 ஆம் ஆண்டு சீனா மற்றும் இலங்கை இடையே அரிசி – இறப்பர் உடன்படிக்கை கையெழுத்தான 70 ஆவது ஆண்டு நிறைவாகும். 

இவ்வுடன்படிக்கையின் வரலாறு மற்றும் அதன் உள்ளடக்கத்தை மீளாய்வு செய்வது, புதிய யுகத்தில் சீன – இலங்கை நேர்மையான மற்றும் நட்பார்ந்த நெடுநோக்கு ஒத்துழைப்பு நட்புறவுக்கும், இருநாட்டு பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்துக்கும் தொடர்ச்சியான புதிய இயக்காற்றலை வழங்கும்.

1949ஆம் ஆண்டு நவ சீனா நிறுவப்பட்ட பிறகு, அமெரிக்காவை தலைமையாகக் கொண்ட மேலை நாடுகள் சீனா மீது பொருளாதாரத் தடை மேற்கொண்டு, இறப்பர் உட்பட முக்கியப் பொருட்களைப் போக்குவரத்து தடைப் பட்டியலில் சேர்த்தன.

1950ஆம் ஆண்டு கொரிய போர் மூண்ட பிறகு, இறப்பர் மூலப் பொருட்கள் சீனாவுக்கு அவசரத் தேவையாக இருந்தது. ஆனால் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் சீனாவுக்கு பன்முக இறப்பர் தடையை ஐ.நா. விதித்தது.

சீனா உட்பட சோஷலிச நாடுகள் மீது இறப்பர் தடையை மேற்கொள்ளுமாறு இலங்கை

மற்றும் இறப்பர் உற்பத்தி செய்யும் இதர நாடுகளுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்ததோடு, செயற்கை இறப்பர் தொழிலை பெரிதும் வளர்த்து வந்தது. 

மேலும், உலக இறப்பர் சந்தையைக் கைப்பற்றும் விதம், பெருமளவில் செயற்கை இறப்பர் பொருட்களைப் பயன்படுத்த உள்நாட்டு இறப்பர் தயாரிப்புத் தொழிலை அமெரிக்கா கட்டாயப்படுத்தியது.

1951ஆம் ஆண்டு ஜுலை கொரிய போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு, அமெரிக்காவுக்கு தேவைப்படும் இறப்பர் அளவு குறைந்தது. இதனிடையே ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளின் இறப்பர் தேவையும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவு குறைந்தது. சர்வதேச சந்தையில் இறப்பர் விலை கடும் சரிவைச் சந்தித்தது. 

இதன் விளைவாக இலங்கை போன்ற இறப்பர் உற்பத்தி நாடுகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. பல இறப்பர் தோட்டங்கள் திவாலான நிலையில் இருந்த போது, இலங்கையில் 3 இலட்சம் தொழிலாளர்கள் வேலையின்மை நிலையை எதிர்கொண்டனர்.

1952ஆம் ஆண்டு வசந்தகாலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட இலங்கையில் நெல் அறுவடை மோசமானது. அதோடு, அரிசி ஏற்றுமதிக்கு முக்கியமான தென்கிழக்காசிய நாடுகளிலும் நெல் அறுவடை குறைந்ததால், சர்வதேசச் சந்தையில் அரிசி விலை தீவிரமாக உயர்ந்தது. 

தானிய நெருக்கடியில் சிக்கிக் கொண்ட இலங்கை, அமெரிக்காவிடம் உதவி கேட்டது. ஆனால் அமெரிக்கா கொள்ளைக்காரர் போல் மலிவான விலையில் இலங்கையின் இறப்பர் பொருட்களை வாங்கவும் உயர் விலையில் அதற்கு அரிசியை விற்கவும் முயன்றது.

இந்நிலையில் இலங்கை அரசு சீனாவுடன் தொடர்பு கொண்டு, இறப்பர் மூலம் அரிசியைப் பெறும் வர்த்தகத்தை மேற்கொள்ளத் தொடங்கியது. இதற்கு சீன அரசு ஆக்கப்பூர்வ மறுமொழி அளித்தது. 

அப்போதைய சீனத் தலைமை அமைச்சர் சோ என்லாயின் வழிகாட்டலில், 1952ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி, சீன-இலங்கை வர்த்தக உடன்படிக்கையிலும், சீன மக்கள் குடியரசு இலங்கை அரசுக்கு 80 000 தொன் அரிசியை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்திலும் இருநாடுகள் கையொப்பமிட்டன.

சீனா அரிசி வழங்கிய அரிசியால், இலங்கையின் தானிய நெருக்கடி தணிவடைந்தது. டிசம்பர் 18 ஆம் திகதி இருநாடுகளும் பெய்ஜிங்கில் முதலாவது ஐந்தாண்டுகால அரிசி – இறப்பர் உடன்படிக்கையை கையெழுத்திட்டன. அதன்படி ஆண்டுதோறும் இலங்கை சீனாவுக்கு 50 000 தொன் இறப்பரை விற்பனை செய்வதோடு, சீனா இலங்கைக்கு 270 ஆயிரம் தொன் அரிசியை விற்பனை செய்யும். 1982ஆம் ஆண்டு வரை இத்தகைய உடன்படிக்கையில் இருநாடுகளும் 6 முறை கையொப்பமிட்டன.

சீனாவும் இலங்கையும் இன்னல்களை எதிர்கொண்டிருந்த நிலையில் அரிசி – இறப்பர் உடன்படிக்கையானது, கூட்டு ஒத்துழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகும். இவ்வுடன்படிக்கை, நவ சீனா சோஷலிசம் சாரா நாட்டுடன் உருவாக்கிய முதலாவது முக்கிய அரசு நிலை வர்த்தக உடன்படிக்கை. 

வேறுபட்ட சமூக அமைப்பு முறை கொண்ட ஒரு நாட்டுடன் தூதாண்மை உறவை நிறுவாத நிலையில் அரசு நிலை வர்த்தக உடன்படிக்கையை சீனா உருவாக்குவது முன்னோடி செயலாகும். 

அமெரிக்காவின் பொருளாதார முடக்கம் மற்றும் போக்குவரத்துத் தடையை அகற்றி, தூதாண்மை உறவை நிறுவாத நாடுகளுடன் வர்த்தகத்தை விரிவாக்குவதற்கு முன்மாதிரியாகப் பங்காற்றுவது இவ்வுடன்படிக்கையின் முக்கியத்துவமாகும்.

அரிசி-இறப்பர் உடன்படிக்கையின் குறிக்கோள் எப்போதுமே இருநாட்டு உறவில் காணப்படுகிறது. முதலாவதாக, இருநாடுகளும் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து சமமான

நிலையில் பழகி, சித்தாந்தத்தைப் பொருட்படுத்தாமல், முக்கியமான சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகளிலும், எதிர் தரப்பின் மைய நலன் மற்றும் பொது அக்கறை கொண்ட விவகாரங்களிலும் நல்ல பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை நிலைநிறுத்தி, ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, கூட்டு வெற்றிக்காக ஒத்துழைத்து வருகின்றன.

மனித உரிமை பிரச்சினையில் இலங்கைக்கு உறுதியாக ஆதரவளிக்கும் சீனா, சர்வதேச அரங்கில் பலமுறை நேர்மையுடன் இலங்கைக்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. தைவான், திபெத், சின்ஜியாங், மனித உரிமை, புதிய ரக கரோனா வைரஸ் தோற்ற ஆய்வு உள்ளிட்டவை தொடர்பான பிரச்சினைகளில் இலங்கை சீனாவுக்கு ஆதரவளித்து வருகிறது. இரண்டாவதாக, இலங்கையுடனான தொடர்பில் சீனா சரியான நேர்மை-நலன் சிந்தனையுடன் செயல்பட்டு வருகிறது.

அரிசி-இறப்பர் உடன்படிக்கையின் படி, சீனா சர்வதேச சந்தை விலையில் இலங்கைக்கு அரிசியை விற்பனை செய்யும் அதேவேளை, சர்வதேச சந்தை விலையை விட 5 முதல் 8 விழுக்காடு உயர்வான அளவில் இலங்கையின் இறப்பர் பொருட்களை இறக்குமதி செய்து வந்துள்ளது. சீனாவில் தானியப் பற்றாக்குறை ஏற்பட்ட காலத்திலும் இலங்கையுடனான உடன்படிக்கையை நிறைவேற்றும் விதம் சீனா மியன்மாரிலிருந்து அரிசியை இறக்குமதி செய்தது.

தற்போது அரிசி-இறப்பர் உடன்படிக்கையின் குறிக்கோள், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான இருநாட்டு ஒத்துழைப்பில் வெளிக்காட்டப்பட்டுள்ளது. 

கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட முக்கியத்

திட்டப்பணிகளின் மூலம் இலங்கையுடன் இணைந்து உயர்தரத்தில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்தை முன்னேற்றவும், தொற்று நோய்க்குப் பின் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் சமூகத்தின் தொடர்வல்ல வளர்ச்சிக்கு இயக்காற்றலை வழங்கவும் சீனா விரும்புகிறது. இதற்கு இலங்கை அரசு ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு நல்கியுள்ளது.

சீன-இலங்கை நட்புறவையும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்தில் சீனாவுடன் இலங்கை ஒத்துழைத்து தனது பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னேற்றுவதைக் காண விரும்பாத சிலர், கடன்வலை போன்ற கூற்றுகளைப் பரப்பி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவைக் களங்கப்படுத்தி வருவதோடு, எதிர்ப்பு சக்தியை ஆதரித்து, இலங்கையின் உள்நாட்டு அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தவும் சீன-இலங்கை ஒத்துழைப்பில் தலையிடவும் முயன்று வருகின்றனர்.

இத்தகைய பிரச்சினைகளை சீனாவும் இலங்கையும் சீரான முறையில் கையாண்டு, தீய நோக்கம் கொண்டுள்ளவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி விடக் கூடாது. 

இருதரப்புகளின் கூட்டு முயற்சியுடன், சீன-இலங்கை உறவு புதிய வரலாற்று நிலைமையில் தொடர்ந்து புத்துயிர் பெற்று, இருநாடுகள் மற்றும் இருநாட்டு மக்களுக்கு மேலும் பெரும் நன்மை பயக்கும் என நம்புகிறோம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen