...
செய்திகள்

சீன உரத்தில் அபாயகர பக்டீரியா இல்லை என மூன்றாம் தரப்பு உறுதி

அபாயகர பக்டீரியா அடங்கியதாகக் கூறப்பட்ட சீன சேதன பசளையில் அத்தகைய தீங்கு விளைவிக்கும் பக்டீரியா இல்லையென மூன்றாம் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

ஸ்கட்டர் குளோபல் இன்ஸ்பெக்ஷன் எண்ட் சர்வே (Schutter Global Inspection and Survey) நிறுவனத்தினால் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய தாவரவியல் தடுப்புக் காப்பு சேவையினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குறித்த சேதன பசளையில் அபாயகரமான பக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் சீன உர நிறுவனம் வழங்கிய மாதிரிகளில் அபாயகரமான பக்டீரியா, சால்மனெல்லா மற்றும் அஸ்கார்ட் முட்டைகள் எதுவும் காணப்படவில்லையென மேற்படி நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தாவரவியல் தடுப்புக் காப்பு சேவையினால் குறித்த உரத்தில் அபாயகர பக்டீரியா இருப்பதாக வழங்கப்பட்ட அறிக்கையைச் சீன உர நிறுவனம் ஏற்க மறுத்துவிட்டது.

அத்துடன், உர மாதிரிகள் இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சுயாதீன மூன்றாம் தரப்பினரால் மீண்டும் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில் குறித்த உர மாதிரிகள் மூன்றாம் தரப்பினருக்கு வழங்கி, பரிசோதிக்கப்படமாட்டாது என்றும், உரக் கப்பல் திருப்பி அனுப்பப்படும் எனவும் விவசாய அமைச்சர் தெரிவித்திருந்தார்.

ஸ்கட்டர் குளோபல் இன்ஸ்பெக்ஷன் எண்ட் சர்வே நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அறிக்கை தற்போது, தேசிய தாவரவியல் தடுப்புக் காப்பு சேவையிடம் குறித்த  சீன உர நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen