உலகம்செய்திகள்

சீன ஜனாதிபதி எச்சரிக்கை .!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) நூற்றாண்டு விழா இன்று காலை பீஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில் சுமார் 70 ஆயிரம் மக்களின் பங்கேற்றலுடன் நிகழ்வு இடம்பெற்றது.

கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய சீன ஜனாதிபதி சீ ஜிங் பின் சீனா, உலகில் எந்தவொரு நாடும் சீனாவை அடிமைப்படுத்தவோ அல்லது தலையீடுகளை மேற்கொள்ளவோ ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையெனவும் அவர் உறுதியளித்தார்.

சீனாவை அடிமைபடுத்தும் காலம் நிறைவு பெற்று விட்டது. எந்த வெளிநாட்டு சக்திகளும், சீனாவை அடக்கவோ, அடக்குமுறைகளை ஏவவோ அடிமைபடுத்தவோ அனுமதிக்க முடியாது. அவ்வாறு செய்ய முயல்பவர்கள், 140 கோடி மக்கள்கொண்ட இரும்பு சுவர் முன்னர் இரத்தக்களறியை சந்திப்பார்கள். இராணுவத்தின் மீதான கட்சியின் கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் குறிப்பிட்ட அவர், நவீன சீனாவின் எதிர்கால பயணத்திற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாடுகளானது முழு உலகிற்கும் முன்மாதிரியெனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

வானவேடிக்கைகள், இராணுவ மரியாதை அணி வகுப்புகளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை மெருகூட்டின. நிகழ்வில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணிந்திருக்கவில்லையெனவும் தெரியவருகிறது.

Related Articles

Back to top button