செய்திகள்

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி அடுத்த மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இது இலங்கைக்கான அவரது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயமாகும். இந்த விஜயத்தின்போது சீனாவின் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பிரதமர் உட்பட முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன வெளிவிவகார அமைச்சர், தனது பிராந்திய பயணத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வரவுள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கே இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com