காலநிலைசெய்திகள்மலையகம்

சீரட்ட காலநிலை காரணமாக பசறை பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு …

சீரட்ட காலநிலை காரணமாக பசறை பிரதான வீதியில் போக்குவரத்து மட்டுப்படத்தப்பட்டுள்ளது.

குறித்த பாதை வீதி அதிகாரசபையினால் செப்பனிட்டுவருகின்ற நிலையில் தொடர் மழை காரணமாக வேலையை தொடர்ந்து செய்வதற்கு தடையாக இருப்பதோடு ,பாதைகளில் பாரிய வெடிப்பு நிலைமை காண ப்படுவதால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே போக்குவரத்துக்கு இடம்பெறுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

லுணுகல நகரிற்கு செல்வதற்கான குறித்த பாதையில் வாகனம் கடக்க முடியாத பகுதியை பயணிகள் நடந்து சென்று கடக்கும் அதேவேளை ஹொப்டன் – மில்லபெத்த பகுதியை கடந்து செல்ல பிரிதொரு பேருந்திலோ / வேறு வாகனங்களிலோ செல்லவேண்டிய நிலை காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button
image download