மலையகம்
சீரற்ற காலநிலையால் சேதமடைந்த நடைபாதையின் புணரமைப்பு பணிகள் ஆரம்பம்

அக்கரப்பத்தனை – டயகம கொலணியின் குடியிருப்புகளுக்கு செல்லும் நடை பாதை சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்த நிலையில் புணரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த வேலைத்திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் கொலணியின் குடியிருப்புகளுக்கு செல்லும் நடை பாதை சேதமடைந்து மக்கள் போக்குவரத்து மேற்கொள்வதற்கு பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வந்த நிலையில் அக்கரப்பத்தனை பிரதே சபை உறுப்பினர் ரதிதேவிக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து இந்த செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.