...
காலநிலைபதுளைமலையகம்

சீரற்ற காலநிலையால் பசறை – நமுனுகுல பிரதான வீதியில் மண்சரிவு அபாயம்.

பதுளை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவுகின்ற சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகிறது.

குறிப்பாக பிரதான வீதிகளில் ஆங்காங்கே சிறியளவில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதோடு போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதை காணமுடிகிறது.

நேற்றிரவு பெய்த பலத்த மழை காரணமாக பசறை – நமுனுகுல பிரதான வீதியிலும், பள்ளக்கெட்டுவ – நமுனுகுல பிரதான வீதியிலும் கற்பாறைகள் வீதியில் சரிந்து விழுந்தமையால் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வாகன போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

ஹாலிஎல நகர்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பதுளை – பண்டாரவளை பிரதான வீதியிலான போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen