செய்திகள்மலையகம்

சீரற்ற காலநிலை தொடர்பில் அவதானம் ; நுவரெலியா, இரத்தினபுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தற்போது நிலவுகின்ற அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன், காலி மாவட்டத்தின் நெலுவ, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்ஹல மற்றும் பாலிந்தநுவர, இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, குருவிட்ட, கலவான மற்றும் எஹெலியகொட, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட பிரதேசங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்சரிவு, மண்திட்டு உடைந்து வீழ்தல், கற்கள் சரிதல், போன்ற அபாயம் காணப்படுவதனால், மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.

This image has an empty alt attribute; its file name is landslide_warning.jpg

Related Articles

Back to top button