...
நுவரெலியாமலையகம்

சீரற்ற காலநிலை நுவரெலியாவில் பல குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில்  தற்போது நிலவிவரும் அதிகரித்த மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அபாய சூழ்நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்றைய  நாளில் (02/11) நுவரெலியா பிரதேச செயாயலகத்தின் கீழ் இயங்கும் 476ஏ கிரிமெட்டி பிரிவிற்கு சொந்தமான கார்லிபேக் மற்றும் தம்பகஸ்தலாவா தோட்டத்தில் அதிகரித்த மழை காரணமாக அப்பிரதே மக்கள் வெள்ளப் பெருக்கினாலும், மண்சரிவினாலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கார்லபேக் தோட்டத்தில் 12 குடும்பங்கள் 46 நபர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களின் உடைமைகள் முழுமையாக சேதமடைந்துள்ளதன.

இவர்களில் பெண்கள் 26 பேர் , 6 வயதுக்கு கீழ்ப்பட்ட  சிறுவர்கள் 5 பேர் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட 8 நபர்கள் இவ்வாறு மொத்தமாக 46 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை தம்பகஸ்தலாவ  தோட்டத்தில் மண்சரிவினால் 9 குடும்பங்களை சேர்ந்த 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உதவிகளைக் பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைதுவ பிரிவின் கண்கானிப்பில் மேற்கொள்ள கிரிமிட்டிய கிராமசேவகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

டி.சந்ரு செ.திவாகரன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen