காலநிலைசெய்திகள்மலையகம்

சீரற்ற வானிலையால் நால்வர் பலி : ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு.!

நாட்டில் தற்போது நிலவும் தொடர் மழையுடன்கூடிய சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் நால்வர் பலியாகியுள்ளனர். இருவர் காணாமற் போயுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அத்துடன், 31 ஆயிரத்து 990 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 478 வீடுகள் பகுதியளவிலும் 7 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. ஆயிரத்து 145 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 182 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் 33 பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேவையான முன்னாயத்தங்களை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com