செய்திகள்நுவரெலியாமலையகம்

சீரான பஸ் போக்குவரத்தை அரசாங்கம் வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் நுவரெலியாவில் போராட்டம்.

நுவரெலியா – இராகலை புரூக்சைட் சந்தியிலிருந்து கோணப்பிட்டி வழியாக குட்வூட் வரை, சீரான பஸ் போக்குவரத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, புரூக்சைட் சந்தியில், இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குரன்கெத்த, வலப்பனை ஆகிய கல்வி வலயங்களில் அமைந்துள்ள பின்தங்கிய பிரதேச பாடசாலைகளான மாகுடுகல, ஹயிபொரஸ்ட் விவேகானந்த, ஹயிபொரஸ்ட் 3, பிரமிலி, அல்மா கிரமன்ட், சீட்டன், கோணகலை பாரதி, கோணப்பிட்டிய பிரின்சிஸ், எலமுல்ல, கபரகல ஆகிய பாடசாலைகளுக்கு இராகலை, நுவரெலியா, உடப்புசல்லா ஆகிய நகரங்களிலிருந்து, 100 ரூபா தொடக்கம் 250 ரூபா வரையிலும் ஒரு வழி பயணத்திற்காக செலவு செய்து; 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கடமைகளில் ஈடுபட்டுவருகின்ற போதும், கடந்த பல வருடங்களாக இராகலை பிரதேசத்திருந்து 6.45 மணிக்கு புறப்படும் நுவரெலியா (டிப்போ) பொது போக்குவரத்துசபைக்கு சொந்தமான பஸ்வண்டி கடந்த 2 மாதங்களாக நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ஆசிரியர்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இது தொடர்பில் தடவைகள் போக்குவரத்துதுறை அதிகாரிகளின் கவனதிற்கு கொண்டுவந்திருந்த போதும் அற்பகாரணங்களை முன்வைத்து இதுவரையும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே 2021.4.21 ஆம் திகதி இன்று காலை 7மணி தொடக்கம் 10 மணிவரை கவனயீர்ப்பு போராட்டதினை புரூக்சைட் சந்தியில் முன்னெடுத்திருந்தனர்.

5000 மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதுகாக்குமாறும், மக்களின் போக்குவரத்து உரிமையை உறுப்படுத்துமாறும், கோரிகைகள் முன்வைக்கப்பட்டன.

மாதாந்தம் 10000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொண்டு முச்சக்கர வண்டிகளுக்கு 600 ரூபா தொடக்கம் 700 ரூபா வரையில் செலுத்தி தினமும் வீடுசெல்லவேண்டியுள்ளதாக கவலையுடன் ஆசிரியர் உதவியாளர்கள் குறிப்பிட்டனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நுவரெலியா கல்வி வலய ஆசிரியர்கள் பங்குபற்றியதுடன் போக்குவரத்து அமைச்சர் மற்றும் நுவரெலியா போக்குவரத்து சபை பணிப்பாளார் ஆகியோரின் கவனதிற்கு கொண்டுவரும் பொருட்டு, கோரிக்கைக் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளது.

அத்துடன் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொலைபேசி மூலமாக பணிப்பாளாருடன் தொடர்பு கேட்டுக்கொள்ளப்பட்ட போது, அவர் விரைவில் சபையினை கூட்டி முடிவெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

-டி சந்ரு

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com