...
செய்திகள்

சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் அடையாள பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்தது

15 சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் ஆரம்பித்திருந்த அடையாள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை இன்று (10) காலை 7 மணியுடன் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (10) முதல் தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்காவிடத்து, தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனக் குறித்த தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தாதியர்கள், மருத்துவ இரசாயன நிபுணர்கள், குடும்ப நலச் சுகாதார சேவை அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 15 சுகாதார தரப்பினர் அடையாள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

வேதன முரண்பாடு, சுகாதார சேவையாளர்களுக்கான கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நேற்று (09) முற்பகல் 8 மணிமுதல் மேற்கொள்ளப்பட்ட அடையாள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைகளுக்குச் சென்றிருந்த மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen