செய்திகள்

சுகாதார அமைச்சரின் செய்தி..

கர்ப்பப்பையை அகற்றும் சத்திர சிகிச்சைக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கையொன்றை அகற்றிய சம்பவம் தொடர்பில் கடந்த சில நாட்களாக நாட்டில் அதிகம் பேசப்பட்டது.

இது தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கையொன்றினூடாக அறிவித்துள்ளது.

78 வயதான பெண்ணொருவரே இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download