செய்திகள்

சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு வெகுசன ஊடக அமைச்சர் அறிவுறுத்தல்..

புத்தாண்டு காலத்தில் சுகாதார ஆலோசனைகளை கடுமையாக கடைபிடிக்குமாறு வெகுசன ஊடக அமைச்சர் மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

நேற்று முன்தினம் (6) அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர், “புத்தாண்டிற்கு மக்கள் வியாபார நிலையங்களில் அதிகமாக ஒன்று கூடுவதனால், மீண்டும் கொவிட் வைரஸ் தொற்று பரவும் அபாயம் காணப்படுகின்றது. இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?” என்று கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், இது தொடர்பாக கையாள வேண்டிய முறைகள் பற்றிய ஆலோசனைகள் சுகாதாரப் பிரிவு, பொது சுகாதாரகப் பரிசோதகர் மற்றும் பொலிசாருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button