செய்திகள்

சுகாதார துறையினர் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டனர்

சுகாதார துறையினர் பணிப் பகிஷ்கரிப்பை கைவிட்டு இன்று முதல் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளனர்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் பிற அதிகாரிகளுடன் இடம்பெற்ற தீர்க்கமான கலந்துரையாடலைத் தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகர் சங்கம் உட்பட சுகாதாரத் துறையுடன் இணைந்த 15 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டுள்ளன.

முறையான பதவி உயர்வு முறையை வழங்குதல் மற்றும் ஊதிய முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று தொடக்கம் தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதன் விளைவாக, வைத்தியசாலைகளில் வெளிநோயாளர்களுக்கு மருந்து விநியோகம், பி.சி.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனை, எம்.ஆர். ஸ்கேன் உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

Related Articles

Back to top button