செய்திகள்

சுகாதார பாதுகாப்பு வழிகாட்டிகளுக்கு அமைவாக செயற்படுமாறு அரசாங்கம் கோரிக்கை

வார இறுதியில் நீண்ட விடுமுறை காலத்தில் அனர்த்த நிலையை புரிந்துகொண்டு தேசிய பொறுப்பாக கருதி செயற்படுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் தினங்களில் மத வைபவங்கள், புத்தாண்டு வைபவங்களை நடத்துவதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில் இந்த அனைத்தையும் நிறுத்துமாறு கேட்டுக்கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டில் காணப்படும் கொரோனா வைரஸ் புதிய திரிபடைந்து இது முன்னைய வைரசிலும் பார்க்க மாற்றத்தைக் கொண்டுள்ளதாகவும் சுனாமியைப்போன்று வேகமாக தற்பொழுது இந்தியா போன்ற நாடுகளில் பரவிவருவதாகவும், இது எந்த வகை வைரஸ் தொற்று என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோருக்கு 14 நாட்களுக்கு பின்னரே நோய் அறிகுறிகள் தென்படும் என அவர் அறியுறுத்தியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com