கண்டிமலையகம்

சுகாதார வழிகாட்டலுடன் ஆரம்பமானது கண்டி, எசல பெரஹரா

வரலாற்று சிறப்புமிக்க கண்டி, எசல பெரஹரா இன்று காலை காப்பு கட்டும் நிகழ்வுடன் ஆரம்பமாகியது.

அதிகாலை 1.06 மணிக்கு நான்கு தேவாலயங்களின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் காப்பு கட்டும் நிகழ்வு நடந்தது.
ஆகஸ்ட் 23 ஆம் திகதி கண்டி எசல பெரஹரா விழா நிறைவடையும்.


இன்று முதல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை நான்கு தேவாலயங்களின் உள் பெரஹரா நடைபெறும் என்று தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.
கண்டி எசல விழாவின் முதல் ‘கும்பல் பெரஹரா’ ஆகஸ்ட் 13 ஆம் திகதி வீதிகளில் அணிவகுத்து, ஆகஸ்ட் 17 வரை ஐந்து நாட்கள் நடைபெறும்.


ஆகஸ்ட் 18 முதல் ‘ரந்தோலி பெரஹரா’ கண்டி வீதிகளில் அணிவகுத்துச் செல்லும். ஆகஸ்ட் 22 அன்று பிரம்மாண்டமான ரந்தோலி பெரஹரா நடைபெறும்.
தண்ணீர் வெட்டும் விழா மற்றும் பகல் ஊர்வலம் ஆகஸ்ட் 23 அன்று நடைபெறும், அதன்பிறகு இந்த ஆண்டின் கண்டி எசல பெரஹரா வெற்றிகரமாக நிறைவடைந்தது என்று அறிவிக்கும் நிருபம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும். .


தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, பெரஹராவில் பங்கேற்கும் அனைத்து கலைஞர்களும் உயிர் பாதுகாப்பு குமிழியல் உட்படுத்தப்படுவார்கள் என்றும், பெரஹராவின் செயல்பாடுகள் தொடர்பான மேலதிக முடிவுகள் சுகாதார ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெரஹரா நிகழ்வுகளில் பங்கெடுக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

Related Articles

Back to top button
image download