செய்திகள்

சுகாதார விதிகளை உரியவகையில் பின்பற்றாதவர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை

மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் 5,584 உந்துருளிகளும், முச்சக்கர வண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வாகனங்களில் பயணிப்பவர்கள் உரியவாறு சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுகின்றார்களா என்பது குறித்து மேற்கொள்ளப்படும் இந்த சோதனை நடவடிக்கையில், 778 போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது 2,842 உந்துருளிகளிலும், 2,742 முச்சக்கர வண்டிகளிலும் பயணித்த, 8,394 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் 2,363 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button