அரசியல்கண்டி

சுகாதார விதிமுறைகளை பயன்டுத்தி புத்தாண்டை கொண்டா டுவோம் …

வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டினை, சுகாதார விதிமுறைகளை பயன்டுத்தி கொண்டாடுமாறு, ஜனநாயக மக்கள் முன்னணியின், கண்டி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜீவன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் அவர் தெரிவிக்கும் போது , எங்களுடைய மலையக பிரதேசத்தில் வாழும் இளைஞர்கள் தலைநகர் மற்றும், நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் தொழில் புரிந்து வருகின்றார்கள். எனவே, தமிழ், சிங்கள புதுவருடத்தினை கொண்டாடும் முகமாக தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பும் இளைஞர்கள் அனைவரும், எமது சமுதாய நலன் கருதியும், உங்கள் இல்லத்தில் வசிக்கின்ற உறவுகளின் நலன் கருதியும், நீங்கள் அவதனத்துடன் செயற்டவேண்டும் எனவும், Covid19. தொடர்பான விதிமுறைகளை பின்பற்றுவதில் அவதானத்தை செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button