அரசியல்செய்திகள்

சுதந்திரக்கட்சிக்கு முழுமையான ஆதரவு குமார வெல்கம

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தனது முழுமையான ஆதரவினை வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் புதிய கட்சி அலுவலகமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொலன்னாவையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குமார் வெல்கம இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்களாட்சிக்கு எதிராக செயற்பட முனைந்தமையின் காரணமாகவே தான் கட்சியிலிருந்து வெளியேற முயற்சித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார். 
ஆனால் மீண்டும் சுதந்திரக்கட்சி, சரியான பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது இருக்கின்றமை பெருமைப்பட வேண்டிய விடயமாகும் எனவும் குமார வெல்கம சுட்டிக்காட்டினார்.
ஆகையால்தான் சுதந்திரக் கட்சியை வெற்றியடைய செய்ய வேண்டுமென்ற நோக்கில் தற்போது கட்சிக்குள் திரும்பியுள்ளதாகவும் குமார வெல்கம தெரிவித்தார்.

Related Articles

Back to top button