செய்திகள்

சுதந்திர தின வைபவத்தை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு அனுமதியில்லை ..

நாட்டில் தற்பொழுது நிலவும் கொவிட்- 19 தொற்றின் காரணமாக இம்முறை சுதந்திர தின வைபவத்தை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற கமல் குணரட்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் உடனான சந்திப்பில் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறே சுதந்திர தின வைபவத்தை பார்வையிடுமாறு கேட்டுக்கொண்டார்.

73 ஆவது சுதந்திர தினத்திற்கு அமைவாக கிராம மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் மரநடுகைக்கு முக்கியத்துவம் வழங்கி செயற்படுவதற்கு மாவட்ட செயலாளர், கிராம உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இதன்போது கூறினார்.

73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வாரத்தில் வீடுகளிலும், வாகனங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு இதன்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டார்.

சுதந்திர தினத்தன்று நடைபெறும் அணிவகுப்புக்களில் கலந்துக்கொள்ளும் அனைத்து படையினரும் பி.சீ.ஆர், அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் கூறினார்.

இராணுவத்தில் 3153 பேரும், கடற்படையில் 823 பேரும், விமானப்படையில் 740 பேரும், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையில் 510 பேரும், சிவில் பாதுகாப்பு படையில் 407 பேரும் இந்த அணி வகுப்பில் கலந்துக்கொள்ளவுள்ளனர். சுதந்திர தினத்தின் பெருமையை பாதுகாப்பதற்காக இந்த படையினர் தேவைப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் பி.சீ.ஆர், அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

சுகாதார அமைச்சின் ஆலோசனை மற்றும் வழிகாட்டிகளுக்கு அமைவாகவே இந்த சுதந்திர தின வைபவம் மேற்கொள்ளப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com