மலையகம்
சுதந்திரத் தினத்தில் மலையக மக்களுக்காக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
இலங்கையின் 70 வது சுந்தந்திரத் தினம் காலி முகத்திடலில் நடைபெற்று கொண்டிருந்த அதே நேரம் கொழும்புப் புறக் கோட்டே அரச மரத்தடிப் பகுதியில் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (04/02/2018 )இடம்பெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மலையக மக்களுக்கான சிவில் உரிமைகள் மறுக்கப்படுகின்றமை ,காணி ,வீட்டு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளமை, அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படாமை,மலையக மக்களுக்கான நிரந்தர முகவரி இன்மை போன்ற கோஷங்களோடு இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தோட்ட தொழிலாளர் மத்தியநிலையம் ,சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு ,காணி ,வீட்டு உரிமைக்கான அமைப்பு ,ஐக்கிய தொழிலாளர் மத்திய நிலையம் ,கம்னீஸ்ட் தொழிலாளர் சங்கம் ,மக்கள் தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் கலந்துக்கொண்டன.