...
விளையாட்டு

சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர் மீண்டும் ஆரம்பம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று தடவைகள் பிற்போடப்பட்டிருந்த சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர்  எதிர்வரும் 17 ஆம் திகதியன்று மீண்டும் ஆரம்பிப்பதற்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தீர்மானித்துள்ளது. 

10 அணிகள் பங்கேற்கும் சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதியன்று ஆரம்பமானது.

எனினும், கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக காணப்பட்டதால், மே மாதம் 2 ஆம் திகதியன்று இப்போட்டித் தொடர் முதல் தடவையாக இடைநிறுத்தப்பட்டு,  ஜூலை  மாதம் 2 திகதிக்கு பிற்போடப்பட்டது. 

அதன் பின்னர் இம்மாதம் 11 ஆம் திகதியன்று  மீண்டும் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பிற்போடப்பட்டு, எதிர்வரும் 17 ஆம் திகதியன்று போட்டியை மீண்டும் நடத்துவதற்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

இப்போட்டித் தொடரில் ந‍டைபெற்று  முடிந்த 15 போட்டிகளும் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் விளையாடப்பட்டிருந்த நிலையில், தற்போது கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் கொரோனா தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் நடைபெற்று வருவதால், 16 ஆவது போட்டியிலிருந்து எஞ்சிய போட்டிகள் கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் நடத்தப்படவுள்ளது.

முன்னரை விடவும் கடும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி போட்டிகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் எடுத்துள்ளது

Related Articles

Back to top button


Thubinail image
Screen