செய்திகள்

சுமார் 26 இலட்சத்தை திருப்பிக் கொடுத்தார் வைத்தியர் ஷாபி!

சிங்கள தாய்மாருக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, பணி இடைநிறுத்தப்பட்டிருந்த வைத்தியர் ஷாபி, தன் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து முழுவதுமாக வெளிவந்துள்ளார்.

இந்த நிலையில், பொய் குற்றச்சாட்டுக்களுக்காக அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலப்பகுதிக்குரிய, நிலுவை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை ஜூலை 10ஆம் திகதிக்கு முன்னர் மீளச் செலுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் சுகாதார அமைச்சுக்கு உத்தரவிட்டது.

அந்த வகையில், குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு 26 இலட்சத்து 75 ஆயிரத்து 816 ரூபா 48 சதத்தை (2,675,816.48) வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

இவ்வாறு திருப்பி கொடுக்கப்பட்ட 2,675,816.48 தொகையை, நாட்டுக்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக தனது நிலுவை வேதனம் முழுவதையும் சுகாதார அமைச்சுக்கு திருப்பிக் கொடுத்துள்ளார்.

Related Articles

Back to top button