செய்திகள்

சுய தொழிலாளர்களுக்கு நுவரெலியா பருவகாலத்தில் சந்தை வாய்ப்பு பாரத் அருள்சாமி

சுய தொழில் முயற்சிகளையும் தொழில் தருனர்களையும் உருவாக்கும் முயற்சியில் முதற்கட்டமாக 2020, 21 ஆம் ஆண்டுகளில் ஏறத்தாழ 800 பயனார்களுக்கு சுய தொழில் பயிற்சிகள் பிரஜாசக்தி செயல்த்திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு புலமையை மட்டும் வழங்காது அவர்களுக்கான சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் "பிரஜா சொப்பிங்" என்ற செயற்றிட்டத்தின் கீழ் இளம் தொழில் தருனர்களுக்கும் சுய தொழில் முயற்சியாளர்களுக்கும் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கமாக புதுவருட கொண்டாட்டத்தையடுத்த வாரத்தில் நுவரெலிய மாட்டத்தின் பருவகால கொள்வனவு தொகுதியில் விற்பனை குடில் ஒன்றை பெற்றுக் கொண்டுள்ளோம்.
இதனூடாக சுய தொழிலில் செய்த பை(பேக்), கார், டொய்ஸ், ஆடை மற்றும் நிர்மானங்கள் உள்ளிட்ட ஆக்க பொருட்களை விற்பனை செய்து கொள்ள முடியும்.
சர்வதேச, தேசிய ரீதியில் சுற்றுலா பயணிகள் வருகைத் தருகின்ற நிலையில் அவர்களிடம் இதனை கொண்டுச் சென்று, சுய தொழிலாளர்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க முடியும் என பிரஜா சக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
இதற்கான வேலைத்திட்டத்தை எதிர்வரும் வாரத்தில் ஆரம்பிப்பது மட்டுமல்லாமல் அமைச்சர், ஜீவன் தொண்டமானின் தலைமையில் இந்த வேளைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அமரர் ஆறுமுகன் தொண்டமான் இருக்கும் காலத்தில் சுய தொழில் வாய்ப்புகள் கிடைத்திருந்தன. அதேபோன்று, தற்போது, நாங்களும் சுய தொழில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவுள்ளோம். ஆனால், அதற்கான சந்தைபடுத்தல் வாய்ப்புகள் இல்லாதமையினால் சிலருக்கு சுய தொழிலை கைவிடும் நிலைமையை ஏற்பட்டது.
ஆகவே, அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக, சுய தொழில் துறையும் தற்சார்பு பொருளாதார நிலையை ஊக்குவிக்கும் முகமாக, பிரஜா சொப்பிங் செயற்றிட்டத்தை உருவாக்கிவுள்ளோம்.
தொழில் தருனரும் பொருட்களை நேரடியாக, நுகர்வோருக்கு வழங்குவதற்கான பாலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே எங்களுடைய நோக்கம்.
இந்த செயற்றிட்டத்தில், நுவரெலிய மாவட்டம் மட்டுமல்லாது, கண்டி, பதுளை, கோகாலை, இரத்தினபுரி, காலி மற்றும் தெனியாய போன்ற அனைத்து பிரஜா சக்தியில் பயிற்றப்பட்ட அனைத்து சுய தொழிலாளர்களும் இளம் தொழில் முனைவோரும் இதில் பங்குபற்றுவார்கள். ஆகவே, நுவரெலிய பருவகால கொண்டாடத்திற்கு வரும் அனைவரும் இவர்களை ஊக்குவிக்குமாறு கோட்டுக் கொள்கின்றோம்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com