உலகம்

சுர்ஜித்தின் உடல் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம்.

ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுர்ஜத்தின் உடல் பெற்றோர், உற்றார், உறவுகளின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாத்திமா புதூரிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் சிறுவன் சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சுஜித்தின் உடலுக்கு பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சிறுவன் வீழ்ந்த ஆழ்துளை கிணறு தற்போது கொங்கிறீட்டினால் மூடப்பட்டுள்ளது.

ஆழ்துளைக்கிணற்றில் 88 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவன் சுஜித்தின் உடல் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மீட்கப்பட்டது.

தேசிய, மாநில பேரிடர் மீ்ட்புப் படையினர் இணைந்து சிறுவனின் உடலை மீட்டுள்ளனர்.

சிறுவன் சுஜித்தின் உடல் அழுகி துர்நாற்றம் வீசிய நிலையிலேயே காணப்பட்டதால், இரண்டு பாகங்களாகவே மீட்க முடிந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட சடலம் பொலித்தீன் உறையில் சுற்றி மணப்பாறை அரச வைத்தியசாலைக்கு அதிகாலை 5 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பிரேதபரிசோதனையின் முடிவுகள் ஒரு வாரத்துக்குள் முழுமையாக வௌியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download