செய்திகள்பதுளைமலையகம்

சுற்றுலாப்பயணி ஒருவரால் ஹப்புத்தளை எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மை!

இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்ய பிரஜை ஒருவர் வாகன நெரிசல் காரணமாக, கொள்கலனில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முயற்சித்தமையால் ஹப்புத்தளை எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், குறித்த சுற்றுலாப்பயணி எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு அங்கு கூடியிருந்தவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த எரிபொருள் நிலையத்தின் ஊடாக இடம்பெறும் எரிபொருள் விநியோகம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

 
ஹப்புத்தளை எரிபொருள் நிரப்பு  நிலையத்துக்கு ஒரு வாரத்திற்கு பின்னர் இன்று எரிபொருள் விநியோகிக்கப்பட்டதால் காலை முதல் வாகனங்கள் நீண்ட வரிசையில் தரித்து வைக்கப்பட்டிருந்தமை காரணமாக கொழும்பு – ஹப்புத்தளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமு தனராஜா

Related Articles

Back to top button