செய்திகள்

சுற்றுலா தளங்களை வெளிநாட்டு பயணிகள் பார்வையிட சந்தர்ப்பம்

பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தெரிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா தளங்களை வெளிநாட்டு பயணிகள் பார்வையிட சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் சுற்றுலா தளங்களை பார்வையிடுவதற்கான வாய்ப்பு அற்றுப்போயிருந்த நிலையில் , சுற்றுலா தளங்கள் மூடப்பட்டதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்க தெரிவித்தார். எனவே பயணத்தடை தளர்த்தப்பட்டதையடுத்து தெரிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா தளங்களை வெளிநாட்டு பயணிகள் பார்வையிட சந்தர்ப்பமளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அதற்கமைய சீகிரியா மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட சுற்றுலா தளங்களை பார்வையிட சந்தர்ப்பமளிக்கப்படவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தம்மிகா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button