செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு நாடு பூராக பயணிக்க அனுமதி.!

கொரோனா தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நிலையில் அவர்களுக் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனின் அவர்கள், நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாடளாவிய ரீதியில் பயணம் செய்த 07 நாட்களில் அவர்கள் மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது​.

சகல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இலங்கைக்கு வருவதற்கு முன் 72 மணி நேரத்தில் பெறப்பட்ட சோதனை அறிக்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் கடிதம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது​.

Related Articles

Back to top button