செய்திகள்விளையாட்டு

சுழற்பந்து வீச்சு ஆலோசகராக ரங்கன ஹேரத் நியமனம்

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் பங்களாதேஷ் அணியின் சுழல்பந்து வீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய ரங்கன ஹேரத், இந்த ஆண்டு நடைபெறவிருக்கின்ற டி20 உலகக் கிண்ணம் வரையில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சு ஆலோசகராக செயற்படுவார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து ஜாம்பவானான ரங்கன ஹேரத், 93 டெஸ்ட் போட்டிகளில் 433 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Photo/espn

Related Articles

Back to top button