ஆன்மீகம்

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 74 ஆவது சிரார்த்த தின நிகழ்வு மட்டக்களப்பில்..

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 74 ஆவது சிரார்த்த தின நிகழ்வுகள் நேற்று (19) மட்டக்களப்பில் பல்வேறு இடங்களில் அனுஸ்டிக்கப்பட்டது.

அதனடிப்படையில் கல்லடி – உப்போடை மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் சிவானந்தா வித்தியாலய அதிபர் ந.சந்திரகுமாரின் ஒழுங்கமைப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
அடிகளாரது சமாதிக்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து பாடல் பாடி ஜனனதின நிகழ்வுகள் சுகாதார முறைப்படி அனுஷ்டிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு திருநீற்றுப் பூங்காவில் அமைந்துள்ள சுவாமியின் திருவுருவச் சிலைக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் மு.பவளகாந்தனின் தலைமையில் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து வின்சன்ட் மகளீர் தேசிய பாடசாலையின் மாணவிகளால் சுவாமி விபுலானந்தரின் ”வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ” எனும் பாடலும் இசைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அத்தோடு சுவாமியின் சிரார்த்த தின நிகழ்வுகள் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவ வளாகத்திலும் இடம்பெற்றிருந்தது.

இதன்போது சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவ வளாகத்தில் அமையப்பெற்றுள்ள சுவாமியின் திருவுருவச்சிலைக்கு நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி திருமதி.பாரதி கெனடி தலைமையில் மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நினைவுப்பேருரை நிகழ்வொன்றும் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button