செய்திகள்

சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியான கானியா வெனிஸ்டர் பிரான்ஸிஸ் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்?

கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியான கானியா வெனிஸ்டர் பிரான்ஸிஸ்,குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மீண்டும் ஆஜராகியுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று முற்பகல் விடுக்கப்பட்ட அறிவிப்புக்கு அமைய அவர் ஆஜராகியுள்ளார்.

இதேவேளை, இன்று முற்பகல் கானியா வெனிஸ்டர் பிரான்ஸிஸ்ஸிடம் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று மூன்றாவது நாளாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இன்று முற்பகல் 09.30 தொடக்கம் மதியம் 01.45 வரை சுவிஸ் தூதரக அதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கானியா வெனிஸ்டர் பிரான்ஸிஸ் நேற்றும் ஆறு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நேற்று முந்தினம் மாலை 05.30 தொடக்கம் நேற்று அதிகாலை 2.30 வரையான 09 மணித்தியாலங்கள் கானியா வெனிஸ்டர் பிரான்ஸிசிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
image download