செய்திகள்

சூடான பால் பாத்திரத்தில் விழுந்த 3வயது குழந்தை சிகிச்சை பலனின்றி மரணம்!

சூடாக்கப்பட்ட பால் பாத்திரத்தில் விழுந்து எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை 13 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது.

மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த எச்.எம்.ஓனாரா ஹிமியங்கி என்ற குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

பாட்டியின் பராமரிப்பில் குறித்த சிறுமி வளர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் உணவு பண்டம் தயாரிப்பதற்காக பாரிய பாத்திரமொன்றில் பால் சூடாக்கப்பட்டுள்ள நிலையில் சிறுமி விளையாடிக்கொண்டிருந்த நிலையில், குறித்த பாத்திரத்தில் தவறி விழுந்துள்ளது.

சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையிலேயே சிறுமி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார் என்று தெரியவருகிறது.

Related Articles

Back to top button