உலகம்

சூரியனை புகைப்படம் எடுக்கும் விண்கலம் தயார் நிலையில்…

சூரியனை மிகவும் அருகில் சென்று நிழற்படம் எடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட ஐரோப்பிய விண்கலம் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சோலார் ஒர்பட்டரேட்டர் அல்லது சோலோ என இந்த விண்கலம்,  பெயரிடப்பட்டுள்ளது,

இந்த விண்கலம் தன்னை புதன் கோளின் சுற்றுவட்ட பாதையினுள் நிறுத்திக்கொண்டு, அங்கிருந்து சூரியனின் பரப்பை ஆய்வு செய்வற்காக தனது தொலைநோக்கியைத் திருப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள பிற கருவிகள், சூரியனிலிருந்து வெளியேறும் துகள்கள் மற்றும் அவற்றின் காந்தபுலம் ஆகியவற்றை ஆராயவுள்ளன.

இந்த விரிவான ஆய்வு சூரியனின் செயல்பாட்டை நன்கு புரிந்துகொள்ள உதவும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வௌியிட்டுள்ளன.

1.5 பில்லியன் யூரோ மதிப்புள்ள இந்த ஆய்வில் பிரித்தானியா 220 மில்லியன் யூரோ முதலீடு செய்துள்ளது.

Related Articles

Back to top button
image download