செய்திகள்பதுளைமலையகம்

சூரிய கிரணத்தின் போது சாப்பிட்ட சிறுமிக்கு நடந்தது என்ன?

பிபில – கொடிகமுவ பகுதியைச் சேர்ந்த தரம் ஐந்தில் கற்கும் மாணவி, பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார்.

நேற்று வைத்தியசாலைக்கு சென்று சுகம் விசாரித்தோம். சூரிய கிரகணத்தன்று தனது தோழிகளோடு சேர்ந்து அம்பரலங்காய் காய்களை சாப்பிட்டிருப்பதாக அப்பிள்ளையின் பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.

ஏதோ உணவு ஒவ்வாமை காரணமாக மயக்கமுற்று சுயநினைவை இழந்திருக்கிறார். உடனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று தான் இச்சிறுமியின் உடல்நலம் வழமைக்கு திரும்பியிருக்கிறது. இவர் பூரண சுகம்பெற இறைவனைப் பிரார்த்திப்போம்.

மாணவர்களின் உணவு பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகள் தொடர்பில் அதிக அக்கறை காட்டுவோம். விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

Related Articles

Back to top button
image download