காலநிலைசெய்திகள்

சூறாவளியில் சிக்கிய மீனவர்களை மீட்க சிறப்பு குழுவினர்..

புல்புல் சூறாவளி தாக்கத்திற்குள்ளான இரண்டு நீண்டநாள் மீன்பிடி படகுகள், மியன்மார் கடல் எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மியன்மார் அதிகாரிகளின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கை பிரிவின் உதவிப் பணிப்பாளர் பத்மப்ரிய திசேரா தெரிவித்துள்ளார்.

குறித்த இரண்டு படகுகளிலும் 11 மீனவர்கள் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் சில நாட்களில் பாதுகாப்பாக அவர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் நடவடிக்கை பிரிவு உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, புல்புல் சூறாவளியினால் வங்காள விரிகுடா கடற்பிராந்தியம் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கடற்றொழில் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Back to top button
image download