செய்திகள்மலையகம்

சென்ஜோன்ஸ் மக்களுக்கு நியாயம் கிடைக்குமா.?

புறுக்சைட் தோட்ட சென்ஜோன்ஸ் டிவிசன் தொழிலாளர்கள் நேற்றையதினம் சுமார் மூன்று மணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பில் கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கத்தின் தோட்ட கமிட்டி தலைவர் கிருஷ்ணகுமார் கருத்து தெரிவிக்கையில், அண்மைகாலமாக சென்ஜோன்ஸ் டிவிசன் பொதுமக்களுக்கு பிரயோசனமில்லாத பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்ஜோன்ஸ் தோட்ட இரண்டாம் நம்பர் மலையின் ஊடாக அமைக்கப்படும் பாதைக்கு எதிர்ப்பு தெரிவித்தே தாம் இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடும் அவர் இப்புதிய பாதை அமைக்கப்படும் பகுதியில் எந்த மக்கள் குடியிருப்புகளும் இல்லை. தனி ஒரு நபருக்கு சொந்தமான விவசாய காணி ஒன்று மட்டுமே காணப்படுகிறது. இப்பாதை அபிவிருத்திக்கான வேலைகளை நுவரெலியா பிரதேச சபை தலைவரே முன்னின்று மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அப்படியாயின் இது அவரின் சொந்த நலனுக்காக மேற்கொள்ளப்படுகின்றதா என்ற கேள்வி எழுகிறது.

அதேவேளை வலப்பனை பிரதேச சபை நிர்வாத்திற்கு உட்பட்ட சென்ஜோன்ஸ் தோட்டத்திற்கு நுவரெலியா பிரதேச சபையினுடாக நிதிஒதுக்கீடு செய்தது எவ்வாறு என பொது மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இப்பாதை புதிதாக வெட்டப்படுவதனால் சுமார் 2000ற்கு மேற்பட்ட தேயிலை மரங்கள் அகற்றப்படும். எமது தோட்டத்தில் பல குடும்பங்கள் வீடு இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றார்கள். இவர்களுக்கு தற்காலிக வீடுகளை அமைத்துக்கொள்ள இடம் ஒதுக்கி தருமாறு தோட்ட நிர்வாகத்திடம் பல தடவைகள் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும் அதற்கு தீர்வை வழங்காத தோட்ட நிர்வாகம் ஆயிரக் காணக்கான தேயிலை மரங்களை அழித்து தனி நபரின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் இப்பாதை வெட்டுவதற்கு எவ்வாறு அனுமதி அளித்தது என கேட்டுமே இவ் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு தோட்ட நிர்வாகத்தால் தனிநபருக்கு இடம் ஒதுக்கி தரும்போது நீண்டகாலமாக நிலவிவரும் வீட்டு பிரச்சனைக்கு ஏன் இடம் தர முடியாது. எனவே வீடில்லாதவர்களுக்கு தற்காலிக வீடுகளை அமைத்துக் கொள்வதற்கு இடம் ஒதுக்கி தருமாறும், பிரயோசனமற்ற பாதை நிர்மானத்தை உடனடியாக நிறுத்துமாறும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தோட்ட நிர்வாகம் உரிய பதிலை தரவில்லை எனின் முழு நாள் பணி பகிஷ்கரிப்பையும் தொடர் போராட்டங்களையும் முன்னெடுக்கமுன்னெடுக்க தொழிலாளர்களும் பொது மக்களும் இளைஞர்களும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு நியாயம் கோரி போராடிய பொதுமக்களில் ஒருவரை சிலர் தாக்கியுள்ள அதேவேளை தாக்கப்பட்டவர் நுவரெலிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன இதனை சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.

எனவே தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும் எனவும் தாக்குதல்களுக்கெதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு கோரிக்கைவிடுக்கின்றது.

Related Articles

Back to top button