உலகம்

செம்மறி ஆடுகளை ஏற்றிச்சென்ற சரக்கு கப்பல் விபத்து.

14 ஆயிரம் செம்மறி ஆடுகளை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பலொன்று ரோமானியா கடற்பிராந்தியத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மிடியா துறைமுகத்தில் இருந்து பயணித்தை ஆரம்பித்த குறித்த கப்பல் கொன்சேன்டா நகருக்கு தென்கிழக்கு பிராந்தியத்தில் கருங்கடலுக்கு அருகாமையில் கவிழ்ந்தது.

கப்பல் பணியாளர்களான 22 சிரியா பிரஜைகளும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

செம்மறியாடுகளை காப்பாற்றுவதற்காக பொலிஸார், தீயணைப்பு சேவைப்பிரிவினர் மற்றும் ரோமானிய கடலோர காவற்படையினர் மீட்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

சுமார் 32 ஆடுகள் நீந்தி வந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் பல ஆடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Articles

Back to top button
image download