தொழில்நுட்பம்

செவ்வாய்க் கிரகத்தில் நாசாவின் கலம் நெறிப்படுத்தி தரையிறக்கினார் சுவாதி மோகன்!

விஞ்ஞான வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தில் தரைக்கலம் ஒன்றை தரையிறக்கும் முயற்சி சற்று நேரத்திற்கு முன்னர் வெற்றிகரமாக நடந்தேறியது. செவ்வாய்க் கிரகத்தில் உயிர்க்கலங்கள் உண்டா என்பதை கண்டறியும் இம்முயற்சி வரும் நாட்களில் மேலதிக வியத்தகு விடயங்களை அறியத்தரலாம்.

எனினும் கடந்த ஆண்டு யூலை 30ஆம் நாள் ஏவப்பட்ட விண்கலம் முதல் இன்று தரையிறங்கும் வரை ஏன் அதன் வடிவமைப்பு உட்பட முழுமையாக தலைத்துவம் வழங்கிய சுவாதி மோகனே இதன் மையக்கருவாக இருந்தார்.

பெங்கலூருவில் பிறந்து ஒரு வயதில் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து இன்று நாசாவின் முதன்மை விஞ்ஞானியாகி இன்றைய வரலாற்று நிகழ்வை உலகத் தொலைக்காட்சிகளில் நெற்றியில் பொட்டுடன் நெறிப்படுத்திய சுவாதி மோகனைப் பார்த்த போது பெருமையாக இருந்தது.

(nehru)

Related Articles

Back to top button