...
சிறப்புசெய்திகள்தொழில்நுட்பம்

செவ்வாய், வெள்ளி கோள்கள் இணையும் அரிய வானியல் நிகழ்வு

செவ்வாய் கோளும் வெள்ளி கோளும் ஒன்றை ஒன்று நெருங்கி இணைவது போல தோன்றும் அரிய நிகழ்வு இன்று வானில் தோன்றவுள்ளது. மேற்கு வானில் இந்த அற்புதக் காட்சி இன்று தென்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு கோள்களுக்கும் இடையே வானில் 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும் என கூறுகின்றனர். ஆனால் பல மில்லியன் தூரம் இடைப்பட்ட இடைவெளி இருக்கும் என்று தெவித்துள்ளனர். செவ்வாய், வெள்ளி கோள்களுக்கு சுமார் நான்கு டிகிரி தொலைவில் சந்திரன் தென்படும் என்றும் இன்றையதினம் மாலை மேற்கு வானில் தென்படும் இந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இதுபோல் கோள்கள் ஒன்றை ஒன்று நெருங்கும் காட்சியைத் தொலைநோக்கி போன்று எந்தவிதக் கருவியும் இல்லாமல் பொதுமக்கள் வெற்றுக் கண்களால் காண முடியும் என்றும் இதில் எந்தவித ஆபத்தும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேற்கு அடிவானம் தெளிவாகவும் மேகம் மறைப்பு ஏதும் இல்லாமல் தெரியக்கூடிய ஒரு இடத்தில் இருந்து இந்த நிகழ்வை காணமுடியும். சூரியன் மறைந்த பின்னர் வானத்தைப் பார்த்தால் இரண்டு கோள்களும் ஒன்றை ஒன்று நெருங்குவது தெளிவாக இருக்கும்.

இன்று ஒன்றையொன்று நெருங்கி வரும் கோள்கள் அதன் பின்னர் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதையும் அவதானிக்கலாம். இந்த கோள்கள் ஒன்றையொன்று நெருங்கும் அரிய காட்சியை நேரடியாகவோ அல்லது தொலைநோக்கி மூலமாகவோ கண்டு ரசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen