செய்திகள்

சேவை பகிஷ்கரிப்பில் மட்டகளப்பு டிப்போ ஊழியர்கள் – மக்கள் அசௌகரியம்

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு டிப்போ ஊழியர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள், நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு டிப்போ ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறி லங்கா சுதந்திர தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம், அகில இலங்கை மோட்டார் ஊழியர் சங்கம், இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர் சங்கம் ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதேவேளை தமது கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படும் வரை தொடரவுள்ளதாக, போக்குவரத்துச் சபை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Back to top button
image download