செய்திகள்

சைட்டத்தில் கற்ற 82 பேருக்கு மருத்துவ பயிற்சி பெறுவதற்கான வசதி.

சைட்டம் மருத்துவ கல்லூரியில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த 82 பேருக்கு மருத்துவ பயிற்சிகளை உரிய வகையில் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்தி, அவர்களை பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றம் இலங்கை
மருத்துவ சபைக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.

மாலம்பே சைட்டம் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற மூன்று பட்டதாரிகளால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனு மீதான இறுதி பரிசீலனையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே,எல்.ரி.பீ தெஹிதெனிய மற்றும் பீ.பத்மன் சூரசேன ஆகியோர் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளனர்.அதற்கமைய இன்று முதல் மூன்று வாரங்களுக்குள் சைட்டம் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்களை பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றம் இலங்கை மருத்துவக் கல்லூரிக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download