விளையாட்டு

சொந்த மண்ணில் தென்னாபிரிக்காவை சந்திக்குமா இந்தியா – நாளை முதல் இருபதுக்கு 20

பெப் டு பிளசிஸ் , குயின்ட் டி கொக் மற்றும் ககிசோ ரபாடா உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்களை உள்ளடக்கிய தென் ஆப்பிரிக்கா மூன்று இருபதுக்கு 20 மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது.

இந்த நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி நாளை இரவு இலங்கை நேரப்படி இரவு 7 மணியளவில் தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி அண்மையில் மேற்கிந்தியதீவுகளை அதன் சொந்த மண்ணில் இருபதுக்கு 20 ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் வீழ்த்தியிருந்தது.

இதில் மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான 03 இருபதுக்கு 20 தொடரை மூன்றுக்கு பூச்சியம் எனவும் ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூச்சியம் எனவும் டெஸ்ட் தொடரை 02 க்கு பூச்சியம் எனவும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதனால் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய நம்பிக்கையுடன் விளையாடும் என கிரிக்கெட் விற்பன்னர்கள் கூறியுள்ளனர்.

இறுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியா அதன் சொந்த மண்ணில் 02 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை இழந்திருந்தது.

மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் விளையாடிய அதே துடுப்பாட்ட வீரர்கள் நாளைய போட்டியிலும் விளையாடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் களமிறங்குவதுடன் , அணித்தலைவர் விராட் கோஹ்லி , ரிஷப் பாண்ட் , மனிஸ் பாண்டி ஆகியோரும் முதல் ஐந்து துடுப்பாட்ட வீரர்களாக இடம்பெறுவர் என பி.சி.சி. குறிப்பிட்டுள்ளது.

சகலதுறை வீரரான ஹர்திக் பாண்டியா அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
அவர் அணியில் விளையாடுகின்றமையால் குர்னால் பாண்டியா அல்லத ஜடேஜா ஆகியோரில் ஒருவர் விளையாடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்து வீரர்களில் தீபக் சாஹருக்கும், கலீல் அகமதுவுக்கும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்கும். 
அதே நேரத்தில் நவ்தீப் சைனியும் நாளைய போட்டியில் விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சுழற்பந்து வீரர்களில் ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க கடைசியாக விளையாடிய நான்கு இருபதுக்கு 20 தொடர்களையும் கைப்பற்றியுள்ளது.
 

குறிப்பாக சிம்பாப்வே ( 2-0) என்ற கணக்கிலும்,அவுஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கிலும், பாகிஸ்தானுக்கு எதிராக 2-1 என்ற கணக்கிலும், இலங்கையை 3-0 என்ற கணக்கிலும் தென்னாபிரிக்கா வீழ்த்தியுள்ளது.

இதனால் குயின்டன் டிக் கொக் தலைமையிலான தென்னாபிரிக்காவும் இந்தியாவுக்கு எதிராக சவாலாக விளையாடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாளைய போட்டிக்காக அணி விபரம்.

இந்தியா: 
விராட்கோலி (அணித்தலைவர்.) ரோகித்சர்மா, ஷிகர் தவான், ஷிரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, ரிஷப்பந்த் பாண்ட், லோகேஷ் ராகுல், குர்ணல் பாண்டியா, தீபக் சாஹர், ராகுல் சாஹர், கலீல் அகமட், ரவீந்திர ஜடேஜா, நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர்.

தென்ஆப்பிரிக்கா: 
குயின்டன் டிகாக் (அணித்தலைவர்) டேவிட் மில்லர், வான்டர் டுசன், டெம்பா பவுமா, ரீசா ஹெண்ட்ரிக்ஸ், பிஜோன் போர்ட்டூன், புரன் ஹென்ட்ரிக்ஸ், ஆன்ரிச் நார்ஜே, சுமுட்ஸ், பிரிட்டோரியஸ், ககிசோ ரபடா, பெகுல்வாயோ, ஜூனியர் டாலா, தப்ரியாஷ் ஷம்சி. 

Related Articles

Back to top button