விளையாட்டு

சொந்த மண்ணில் தொடரை தக்கவைக்குமா இந்தியா..?

ஏரோன் பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையில் இதுவரையில் இரண்டு ஒருநாள் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியீட்டியுள்ள நிலையில் நாளைய ஆட்டத்தில் வெற்றியீட்டுகின்ற அணி தொடரை கைப்பற்றி சாதிக்கும்.

நாளைய போட்டியானது பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பிற்பகல் 01 முப்பது அளவில் ஆரம்பமாகவுள்ளது.

Related Articles

Back to top button