மலையகம்

சோளத்தால் வந்த சோகம், தேயிலை நிலம் சோள நிலமாக மாற்றமடைய போகிறதா ..?

லிந்துல ஹென்போல்ட் தோட்டத்தில் சோளம் பயிர்செய்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருந்தமை அனைவருக்கும் தெரிந்ததே.
தொழிற்சங்க அரசியல் பேதமின்றி தோட்ட மக்கள் ஒன்றிணைந்தே இந்த ஆர்பட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
மக்களால்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் மனித உரிமைகள் அமைப்புகள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவினை தந்திருந்தனர்.
லிந்துலை காவல் துறையினருக்கும் அறிவித்து அவர்களின் ஆதரவினையும் பெற்றிருந்தனர்.எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி சுமூகமாக நடைபெற்று மக்கள் தமது பணிகளுக்கும் சென்றிருந்தனர்.
எனினும் ஆர்ப்பாட்டம் முடிந்து ஒரு வாரத்தின் பின் ஹென்போல்ட் தோட்ட முகாமையாளரால் லிந்துலை காவல்துறை அலுவலகத்தில் இந்த தோட்டத்துடன் சம்பந்தமில்லாத இருவர் எமது தோட்டத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தினை ஒழுங்கு செய்து எமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக,அங்கு செய்தி சேகரிக்க சென்ற சமூக ஊடகவியளாளர் ஒருவர்மீதும், மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் மீதும் முறைப்பாடு செய்துள்ளார்.குறிப்பிட்ட ஊடகவியலாளர் அதே தோட்டத்தை வசிப்பிடமாக கொண்டவர்.மேலும்  சமூக பணிகளை மேற்கொண்டு  வருபவர்.பல சமூக நிறுவனங்களில் பணியாற்றியவர்.ஊடகங்கள் வாய
யிலாக பல பிரச்சனைகளை வெளிகொணர்ந்து தீர்வு பெற்று கொடுத்தவர்.
குறிப்பிட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் இவர்  தொழிலாளர்களின் பல்வேறு தொழிற்சங்க பிரச்சனைகளை தீர்வு பெற்று  கொடுத்தவர்.
ஒரு மனித உரிமை செயற்பாட்டாளருக்கும் சுதந்திரம் ஊடகவியளாளருக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதன் ஊடாக ஏனைய இளைஞர்களை பயமுறுத்தி போராட்டத்தை வலுவிலக்க செய்யவே இவ்வாறான நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் தோட்டத்தில் வேலையற்ற இளைஞர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் தலையிட கூடாது என்றே எதிர்பார்க்கின்றனர்.தாம் வாழும் சமூகத்தில் அதுவும் தமது பெற்றோரும் சூழலில் உள்ளவர்களூம் முகங்கொடுக்கும் பிரச்சனைகளை பார்த்துக்கொண்டிருப்பார்களா.?
இது இவ்வாறு இருக்க.

போராட்டம் நடந்து ஒரு வாரத்தின் பின்னர் அதே காணியில் சோளம் பயிரிட மண்ணை பண்படுத்த மீண்டும் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்த போது மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த மண் பதப்படுத்தும் இயந்திரத்தையும் வெளியேற்றி இருந்தனர்.
மக்கள் தாம் சார்ந்திருக்கும் தொழிற்சங்கங்களாள் கைவிடப்பட்ட நிலையில் இந்த பிரச்சனை தொடர்ந்து செல்கின்றது.ஊடகங்களும் இந்த பிரச்சினைக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை. இது வரைக்கும் சம்பந்தப்பட்ட முகாமையாளரையோ அல்லது கம்னியோடு தொடர்பு கொண்டடோ அல்லது தொழிற்சங்க, அரசியல் வாதிகளிடமோ இப்பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வில்லை. மக்கள் தமது மூதாதையர்கள் உயிரை கொடுத்து உழைத்து உருவாக்கிய நிலத்தில் எங்களுக்கு வீடுகள் அமைத்து தர வேண்டும் அல்லது மீண்டும் தேயிலை நாட்ட வேண்டும் என்றே கேற்கின்றனர்.இந்த மண்ணின் மீதும் சமுகத்தின் மீதும் அக்கறை உள்ளவர்களே இவர்களின் இந்த நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உதவுங்கள்.
இந்த செய்தி எழுதிகொண்டிருக்கும்போது குறிப்பிட்ட நிலத்தை தோட்ட நிர்வாகம் சோளப்பயிர்செய்கைக்காக மண்ணை பதப்படுத்தும் பணியில் ஒரு சில தோட்ட தலைவர்களின் ஆதரவோடு மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button