செய்திகள்

சோளம் உள்ளிட்ட தேசிய உற்பத்திகளை மேம் படுத்த இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.

சோளம், குரக்கன், எள்ளு, பயறு, மற்றும் மரமுந்திரிகை உள்ளிட்ட தேசிய உற்பத்திகளின் இறக்குமதியை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மட்டுப்படுத்துவதற்கு விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்ஸவின் ஆலோசனையின் பிரகாரம், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டப்ள்யூ.எம்.டப்ள்யூ.வீரகோன் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பயிர்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு தேவையான விவசாய காணிகளை தயார்ப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதன்மூலம் உள்ளூர் விவசாயிகள் நன்மையடைவர் எனவும் விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download