கட்டுரைமலையகம்

ச.இராஜசேகரனின் “காலத்தால் அழியாதோர்”

தமிழகத்திலிருந்து பிழைக்க வந்தக்கூட்டம் இலங்கை மண்ணில் சிக்கி சீரழிந்த காட்சிகளையும், கொட்டும் மழையிலும், காலும், கைகளும் உறைந்து போன நிலையினையும், கூட்டிவந்து குட்டிச்சுவராக்கிய பெரிய கங்காணிகளையும், மற்றும் துரைமார்கள், கண்டாக்குகளையும் இப் போதுங்கூட கண்முன்னே கொண்டு வந்ததையும், தொழிற்சங்க நிலைகளையும், மற்றும், கொலைகள், போன்றவைகளையும் மக்களுக்கு தமது பாடல்கள் மூலமாக எடுத்தியம்பிய கவித் திலகங்களை மலையகம் மறக்கத் தொடங்கிவிட்டன.
மலையகம் தந்த மாணிக்கங்களின் பெயர்கள் கீழே,

1)எஸ்.ஆர்.எஸ்.பெரியாம்பிள்ளை
2)வி.எஸ்.கோவிந்தசாமி தேவர்
3)கா.சி.ரெங்கநாதன்
4)பி.ஆர்.பெரியசாமி
5)எஸ்.எஸ்.நாதன் (சிவகாமி நாதன்)
6)அ.சிதம்பரநாத பாவலர்
7)நாவல் நகர் பீர்முகம்மது இப்ராகீம்
8)இராமையா தேவர்
9)மா.ஜம்புலிங்கம்
10)ஜபார்
11)கந்தசாமி கணக்கப்பிள்ளை
12)எம்டன் ஏ.விஜயரட்ண இவர் சிங்கள சமூகத்தை சார்ந்த தோட்ட கண்
டக்டர்
13)சீனிாசன்
14)எம்.பி.வேல்சாமி நாதன்
15)கே.ஜி.எஸ்.ஜில் (அழகப்பன்)
16)வி.என்.பெரியசாமி (டீயெம்பீ)
17)கபாலி செல்லன்

இந்தப் பெருந்தகைகளைப் பற்றிய விபரங்கள் இன்றைய தலைமுறைகளுக்கு சரிவரத் தெரியாது. என்றாலும் இந்த மலையக திலகங்களை நினைவு கூறவைப்பது நம கடமைகளாகும்

இங்கு படத்திலிருப்பவர் ஒரு காலத்தில் 10சதம், 15சதத்திற்கு பொட்னி வியாபாரம் செய்தபடி பாடல் புத்தகங்களை பாடி விற்ற வி.எஸ்.கோவிந்தசாமி என நண்பர் எனக்கு தந்துதவினார் ,

Related Articles

Back to top button