உலகம்

ஜிஎஸ்எல்வி-எஃப்10 ஏவுகணை பயணம் தோல்வி

ஜிஎஸ்எல்வி-எஃப்10 ஏவுகணை பயணம் தோல்விஅமராவதி: புவியின் சுற்றுப்பாதை, விவசாயம், பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு பணிகளுக்காக இஓஎஸ்-03 என்னும் செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) உருவாக்கியிருந்தது.இந்த செயற்கைகோள், ஜிஎஸ்எல்வி – எஃப் 10 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று (ஆக.12) காலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 5.43 மணிக்கு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான கவுண்ட் டவுன் நேற்று (ஆகஸ்ட்.11) 03.43 மணிக்குத் தொடங்கியது.ஜிஎஸ்எல்வி-எஃப்10 பயணம் தோல்விவிண்ணில் செலுத்தப்பட்டபின், ஜிஎஸ்எல்வி-எஃப்10 ஏவுகணையின் கிரையோஜெனிக் என்ஜின் பகுதியில் சிறு தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டப்படி 18.39 நிமிடத்தில் செயற்கைகோள் அதன் சுற்றுவட்டப் பாதையையை அடையமுடியவில்லை. அதன்காரணமாக ஜிஎஸ்எல்வி-எஃப்10 பயணம் தோல்வியை சந்தித்துள்ளது. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி செய்துள்ளார்.பூமியின் மேற்பரப்பில் இருந்து 36,000 கி.மீ தூரத்தில் ஏவுகணை நிலைநிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு நிகழ்ந்ததுள்ளது. ஜிஎஸ்எல்வி-எஃப்10, இந்தியாவிலிருந்து புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து செல்லும் 14ஆவது ஏவுகணை ஆகும்.

Related Articles

Back to top button