மலையகம்
ஜனநாயகம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு
நவசக்தி இளைஞர் கழக ஏற்பாட்டில் டயகமவில் “ஜனநாயகம்”தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விழிப்புணர்வு நிகழ்வு இன்று டயகம மூன்றாம் பிரிவு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது ஜனநாயகம் தொடர்பில் பூரண விளக்கங்கள் அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பொலன்னறுவை உதவி தேர்தல் ஆணையாளர் விக்கிரம ஆராய்ச்சி மற்றும் நுவரெலிய உதவி தேர்தல் ஆணையாளர் புலஷ்தி பத்திரன ஆகியோர் கலந்து கொண்டு விளக்கங்களை வழஙகியுள்ளனர்.
மேலும், நிகழ்வில் 60இற்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.